கிராமிய பிரதேச அபிவிருத்திக்காக எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் பிரதேச இணைப்புக்குழுவின் தலைவர்களுக்கும், இறுதி மாகாண சபைகளில் அங்கம் வகித்த உறுப்பினர்களுக்கும் ,உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுக்குமாக தனித்தனியே அபிவிருத்திக்குரிய நிதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அபிவிருத்தி சபை தலைவர்களுக்கு 100 மில்லியன் ரூபா நிதியும், இறுதியாக மாகாண சபைகளில் அங்கம் வகித்த உறுப்பினர்களுக்கு கட்சி பேதமில்லாமல் 20 மில்லியன் ரூபாய் நிதியும், தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை பிரதிநிதித்துவம் செய்கின்றோருக்கு 4 மில்லியன் ரூபாய் நிதியும் அபிவிருத்தி பணிகளுக்காக வழங்கப்படவுள்ளன .
மேலும் மாகாண சபைகளுக்குட்பட்ட ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிற்கும் 3 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமசேவகர் பிரிவுகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில் 1.2 மில்லியன் ரூபா மக்களின் வாழ்வாதார அபிவிருத்தி தேவைகளுக்காகவும் ,1.2 மில்லியன் பொது அபிவிருத்தித் தேவைகளுக்காகவும் மேலும் 6 மில்லியன் ரூபாய் சுற்றாடல் மற்றும் சமூக நல அபிவிருத்திக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





