பெரும்பான்மையான தனியார் பேருந்துகளில் பணியாற்றிய ஊழியர்கள் அந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலைகளைத் தேடுவதால் தேவையான பேருந்துகளை இயக்குவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
நாடு திறக்கப்பட்ட பின்னர் மேல் மாகாணத்தில் இயக்கப்பட வேண்டிய பேருந்துகளின் எண்ணிக்கை 6,000ஆக உள்ளபோதும் வெறுமனே 900 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
எனினும் சுகாதார விதிமுறைகளை மீறும் பேருந்து நடத்துனர்களை கைது செய்யவும், அவர்களின் உரிமங்களை நிறுத்தி வைக்கவும், மறு அறிவித்தல் வரும் வரை பொலிஸ் கண்காணிப்பில் வைக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு எழுத்துப்பூர்வ அறிவுறுத்தல்களை அனுப்ப தயாராக உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





