சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி

  1. பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கிடையிலான போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது

ஐ.பி.எல் – 2020இன் இரண்டாவது போட்டி நேற்று இடம்பெற்றது. இதில் டெல்லி கப்டல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவின் பஞ்சாப் ஆகிய அணிகள் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணியும் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களையே பெற்று சமநிலையாகியதால் சூப்பர் ஓவர் இடம்பெற்றது.

சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி 3 பந்துகளை மாத்திரம் சந்தித்து 2 விக்கெட்டுகளையும் இழந்தது 2 ஓட்டங்களை பெற்றது. ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி இரண்டு பந்துகளில் 3 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.