முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்ற பெயரில் விடுதலைப் புலிகளை நினைவேந்தியவர்களைக் கைது செய்து சிறையில் போடவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ மற்றும் சரத் வீர சேகர ஆகியோர் தெரிவித்ததுள்ளனர்.
கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கடைப்பிடிக்கப்பட்ட போது அதற்கு எதிர்ப்பு வெளியிட்டமை தொடர்பில் கேட்டபோதே மேற்கண்டவாறு பதிலளித்தனர்.
சரத் வீரசேகர
‘நினைவேந்தல் நிகழ்வுகளை தமிழ் மக்கள் வடக்கு – கிழக்கில் நடத்துவதே குற்றம். இந்த நிலையில் அந்த நிகழ்வை தெற்கில் நடத்த தமிழர்களுக்கு அனுமதியைக் கொடுத்தது யார்? நினைவேந்தல் என்ற பெயரில் புலிப் பயங்கரவாதிகளையே தமிழ் மக்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
இந்த நிகழ்வை அவர்கள் நாடெங்கும் பகிரங்கமாக நடத்த முற்படுவதை அனுமதிக்கமுடியாது. கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
விமல் வீரவன்ஸ
‘இறுதிப் போரில் உயிரிழந்த புலிகளை இந்தமுறை வடக்கிலும், கிழக்கிலும், கொழும்பிலும் நினைவேந்திய அனை வருக்கும் எதிராகச் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
நாங்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம் என்பதை ஆட்சியாளர்களிடம் தெரிவித்துக்கொள் கின்றோம். பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பது ஜனாதிபதிக்கும் விளங்கும் – என்றார்.





