வடக்கில் விமாண போக்குவரத்துக் கல்லூரி

வடக்கு மாகாணத்தின் முதற்கட்டமாக விமானபோக்குவரத்து கல்லூரியின் மையத்தினை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (23) யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், இலங்கை விமானபோக்குவரத்து கல்லூரியின் நிறைவேற்று முகாமையாளர் ஆர்.பிரேமல் டி சில்வா இலங்கை விமானபோக்குவரத்து கல்லூரியின் உயர்அதிகாரிகள் தொழில்துறைசார்ந்த கல்லூரியின் விரிவுரையாளர்கள்,கியூமெடிக்கா நிறுவன உத்தியோகத்தர்கள், மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் இதன்போது கலந்துகொண்டனர்.