யாழ்ப்பாணத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படை பணிகளுக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்க்கையில்,
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முரண்பாடுகள் முடிவுக்கு வந்து இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாத இடங்கள் உள்ளன. இதற்காக 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வடக்கு கடற்றொழிலாளர்களின் கடற்றொழிலை அபிவிருத்தி செய்ய நிதி ஒதுக்கீடு. கடற்றொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்க தனியார் துறையுடன் இணைந்ததாக திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





