வடக்கில் இன்று எவருக்கும் தொற்று இல்லை – சத்தியமூர்த்தி

இன்றைய பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இன்று வடமாகாணத்தின் பல இடங்களிலிருந்ததும் 226 பேருக்கான Covid-19 பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

சோதனைக்கு உட்பட்டவர்கள் அனைவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது, என்றார்.