ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(22) கண்டி தலதா மாளிகைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
மறைந்த ராம்மாஞ்ஞ மஹா நிக்காயவின் அக்கமஹா பண்டித சங்கைக்குரிய நாபான பேமசிறி நாயக்க தேரரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கண்டிக்கு சென்றிருந்த வேளையிலேயே தலதா மாளிகைக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.






