வீரவில சிறைச்சாலையின் 74 கைதிகளுக்கு கொரோனா

வீரவில சிறைச்சாலையின் 74 கைதிகளுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஏனைய சிறைச்சாலைகளில் இருந்து தனிமைப்படுத்தலுக்காக வீரவில சிறைச்சாலைக்கு அனுப்பபட்டவர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்றுறுதியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அக் கைதிகளுடன் தொடர்புடையவர்களுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.