யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் நாளை இடம்பெறும்

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் நாளை இடம்பெறும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.

கோரோனா வைரஸ் அச்சம் காரணமாக நவம்பர் 24ஆம் திகதி மூடப்பட்ட கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகளும் இரு வாரங்களின் பின்னர் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன.