இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொரோனா! இந்தியாவில் 6 பேர் பாதிப்பு

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் புதிய வகை இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தியாவில் 6 பேருக்கு இத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவர்கள் 6 பேரும் இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பியவர்கள். இந்த நிலையில், இங்கிலாந்தில் இருந்து தமிழகம் சென்ற 17 பேரில் ஒருவருக்கு கொரோனா வைரஸின் புதிய திரிபின் பாதிப்பு உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சின் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.