
சவூதி அரேபியாவின் அபா விமான நிலையத்தின் மீது ஆளில்லா ட்ரோன் விமானத்தின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் விமானமொன்றும் சேதமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாவது தாக்குதலை நடத்துவதற்காக வந்த ட்ரோன், சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.





