இலங்கையில் பைசர் தடுப்பூசி செலுத்துவதன் ஊடாக, தேவையற்ற பாதிப்புக்களை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினரும், வைரஸ் தொடர்பான விசேட நிபுணருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மேலும்,
பைசர் தடுப்பூசியின் செயற்பாடு தொடர்பில் விஞ்ஞான ரீதியில் சந்தேகம் நிலவுவதாகவும் பைசர் தடுப்பூசியானது, கொரோனா பரவலுக்கு பின்னரான காலத்திலேயே முதல் தடவையாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதனாலேயே, தனக்கு இந்த தடுப்பூசி குறித்து சந்தேகம் நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு பைசர் தடுப்பூசி இறக்குமதியை இயலுமானளவு குறைத்துக்கொள்ளுமாறும், மாற்று தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





