மீண்டும் பயணிகள் சேவையில் குமுதினி படகு

யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் பகுதிக்கும் நெடுந்தீவுக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த குமுதினி படகு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருத்த வேலைகளுக்காக வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தது.

படகின் திருத்த வேலைகள் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் முடிவடைந்த பி்ன்னர் மீண்டும் கடலில் இறக்கப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 70 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் படகின் திருத்த வேலைகள் முன்னெடுக்கப்பட்டன.

வல்வெட்டித்துறை கடற்பகுதியில் இரு நாட்கள் படகு தரித்து நின்று  படகின் தரம் மற்றும் திருத்த வேலைகள் தொடர்பில் ஆராய்ந்து பயணிகள் சேவைக்கு அனுமதி வழங்கிய பின்னர் மீண்டும் குமுதினி படகு சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.