அமெரிக்க-கனடா எல்லையில் வெடிப்பு

The aftermath of a vehicle explosion that took place at the Rainbow Bridge near Niagara Falls, New York, on Wednesday.

நயாகரா நீர்வீழ்ச்சியில் உள்ள அமெரிக்க-கனடா பாலத்தின் அமெரிக்கப் பக்கத்திலுள்ள சோதனைச் சாவடியில் இன்று (22) வாகனம் ஒன்று வெடித்துச் சிதறியதில் அதில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவத்திற்குப் பிறகு இப்பகுதியில் உள்ள நான்கு அமெரிக்க-கனடா எல்லைக் கடப்புகள் மூடப்பட்டன.

FBI சிறப்பு முகவர்-இன்-சார்ஜ் மேத்யூ மிராக்லியா செய்தியாளர் கூட்டத்தில் புதன்கிழமை ரெயின்போ பாலத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று கூறினார்.

மூடப்பட்ட நான்கு அமெரிக்க-கனடா எல்லைக் கடவுகளில் மூன்று பொது மக்களின் பயன்பாட்டிற்காக இன்று மாலை மீண்டும் திறக்கப்பட்டது. ரெயின்போ பாலம் தற்போது விசாரணைக்காக மூடப்பட்டுள்ளது.