இலங்கையின் 4 நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிகள் மற்றும் 7 பிரதமர்களை உருவாக்கிய பழமையான அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி இன்று(6) தனது 74ஆவது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடவுள்ளது.
1946 ஆம் ஆண்டு டி.எஸ். சேனாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய தேசியக்கட்சியானது 1947 முதல் 2020 வரை இலங்கையில் நடைபெற்றுள்ள 16 நாடாளுமன்றத் தேர்தல்களில் 8 இல் வெற்றிபெற்று அரசமைத்துள்ளது. அத்துடன், 8 ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்டு முன்று தேர்தல்களில் வெற்றிபெற்று நாட்டின் ஜனாதிபதியை தீீீர்மானித்தது
எனினும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு என்றென்றும் வரலாறுகாணாத பின்னடைவு ஏற்பட்டது. தேர்தல் மூலம் ஒரு உறுப்பினர்கூட பெற்றுக்கொள்ள முடியாத அபலநிலைக்கு ஐ.தே.க தள்ளப்பட்டது. தேசியப்பட்டியல் ஊடாகவே ஓர் ஆசனம் கிடைக்கப்பெற்றது. அந்த ஆசனத்தை கூட யாருக்கு வழங்குவது என்பது தொடர்பிலும் கட்சிக்குள் நீன்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது.
1994 ஆம் ஆண்டு முதல் 26 வருடங்களாக ஐ.தே.கவின் தலைவராக செயற்படும் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின்கீழ்தான் 75ஆவது ஆண்டிலும் அக்கட்சி காலடி எடுத்துவைத்துள்ளது. எனினும், இம்முறை தலைமைப்பதவியில் மாற்றம் ஏற்படுவது உறுதியென ஐ.தே.க. உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
75ஆவது ஆண்டு நிறைவிற்கு பின்னர் ஐ.தே.கவின் தலைமைப்பதவியில் மாற்றம் ஏற்பட்டு ஐக்கிய மக்கள் சக்தியுடன் இனைந்து பயணிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்





