இலங்கையில் தீவிரமடைந்து வரும் கொரோனாத் தொற்று நிலைமை காரணமாக தொடர்ந்தும் இலங்கை சிவப்பு வலயத்திலேயே காணப்படுவதாக விசேட வைத்திய நிபுணர் மனில்க சுமனதிலக்க தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலில் இலங்கை சிவப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருப்பது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கொரோனா மரணங்கள் மற்றும் நாளொன்றுக்கு இனம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டு இலங்கை சிவப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுவதற்கு இன்னும் ஒரு வாரகாலம் வரை செல்லலாம். அத்துடன் இந்த எச்சரிக்கையில் இருந்து மீண்டு, பச்சை வலயமாக பிரகடனப்படுத்தப்படுவதற்கு நாளொன்றுக்கு இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 950 வரை குறைவடைய வேண்டும்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாட்டில் நாளொன்றுக்கு 4 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டனர். என்றாலும் தற்போது அந்த எண்ணிக்கை குறைவடைந்து வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





