பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று(24) முதல் ஆரம்பமாகின.
முதற்கட்டமாக 12 முதல் 19 வயதிற்கும் இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மேல்மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் பொரளை சீமாட்டி சிறுவர் போதனா வைத்தியசாலையில் வைத்தியர் கோசல கருணாரத்ன தலைமையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெற்றது.
இதன்போது பெருமளவான மாணவர்களை அவர்களின் பெற்றோர் அழைத்து வந்து தடுப்பூசியை போட்டுக் கொண்டனர். தடுப்பூசி பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு வைத்தியசாலையால் பரிசிப் பொதிகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)






