2022ஆம் நிதி ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்தை தயாரிப்பதற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச முன்வைத்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று(27) இடம்பெற்ற அமைச்சரவைக்கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





