நல்லூர் மாப்பாண முதலியாரின் இறுதிச்சடங்கு 10 மணிக்கு நல்லூர் இல்லத்தில் இடம்பெறும்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி குகஶ்ரீ இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் நேற்று09) சிவபதமடைந்தார்.

மாப்பாண முதலியார் கடந்தவாரம் நோய்வாய்ப்பட்டு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று(09) காலை இறைவனடி சேர்ந்தார்.

நல்லூர் மாப்பாண முதலியார் இறுதிக்கிரியை இன்று (10) காலை 10 மணிக்கு அவரது நல்லூர் இல்லத்தில் அமைதியான முறையில் இடம்பெற உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)