திவிநெகும நிதி மோசடி வழக்கில் இருந்து அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் திவிநெகும பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, உள்ளூர் அதிகாரிகளுக்கு GI குழாய் வழங்குவதாக 36 மில்லியன் அரச நிதிகளை மோசடி செய்தததாக பசில் மற்றும் கித்சிறிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்றைய தினம்(15) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே இருவரையும் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





