யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்குமிடையிலான 115ஆவது வடக்கின் பெரும்போர் துடுப்பாட்டப் போட்டி நாளை(21) நடைபெறவுள்ள நிலையில் பார்வையாளர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற ஊடகசந்திப்பில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபர் எழில்வேந்தன் இத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
வடக்கின் பெரும்போர் துடுப்பாட்டப்போட்டி எதிர்வரும் 21,22,23ஆம் திகதிகளில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் பூர்தியாகியிருந்த நிலையில் நாட்டு நிலைமையினை கருத்தில் கொண்டு பொலிஸாருக்கும் இரு பாடசாலைகளின் அதிபர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது. இதன்போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு உள்ளே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.(newscut.lk)
எனினும் பார்வையாளர்கள் அற்ற போட்டி சோபையிழந்துவிடும் எனவும் இப்போட்டியை காண்பதற்கென்று புலம்பெயர் தேசத்திலிருந்து பல பழைய மாணவர்கள் வந்துள்ளனர். எனவே பார்வையாளர்களை அனுமதிக்குமாறு இரு பாடசாலை மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





