புலிகளின் தலைவர் பிரபாகரன் வீட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிவைப்பு

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லத்திற்கு அருகில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஓன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று விநியோகிக்கப்படது.

இலங்கையின் உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற இனப்படுகொலையை நினைவுகூர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் மே15ஆம் திகதிவரை கஞ்சி வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் பட்டினிச் சாவை எதிர்கொண்ட தமிழ் மக்கள் கஞ்சியையே குடித்து உயிர்வாழ்ந்தனர். அதனை நினைவுகூறும் வகையில் கஞ்சி வழங்கப்படுகிறது.

மே15 முதல் யாழ்ப்பாணத்தின் பாடசாலைகளை இலக்கு வைத்து முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.