5 மாதங்களில் 239 கொலைள்! இலங்கையை உலுக்கும் தொடர் கொலைகள்

2023 இன் 146 நாட்களில் 239 கொலைகள் இடம்பெற்றுள்ளன என பொலிஸார் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

துப்பாக்கி பிரயோகங்கள் காரணமாக இந்தவருடம் இதுவரை ஆறுபேர் காயமடைந்துள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

2019 இல் 273 கொலைச்சம்பவங்கள் பதிவாகியிருந்தன 2022 இல் இது 523ஆக அதிகரித்தது என திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பான பிரதி காவல்துறைமா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். கொலைகள் நாளாந்தம் 1.6 வீதமாக அதிகரித்துள்ளன இலங்கைக்கு இது உகந்த நிலைமையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.