யாழ்ப்பாணம்,தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக் கோரி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கவனயீர்ப்பு போராட்டத்தை நேற்று(31) மாலை ஆரம்பித்துள்ளது. தொடர்சியாக இன்றைய தினமும் இப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
இந்தப் போராட்டத்தை அடுத்து அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இன அழிப்பு இராணுவமே வெளியேறு, வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், தையிட்டி மண் தமிழர் சொத்து, சட்டவிரோத திஸ்ஸ விகாரையை இடித்து அகற்று போன்ற கோஷங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பியிருந்தனர்.






