முல்லைதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புதுமாத்தாளன் கடற்கரையில் இன்று(07) காலை 6.30 மணியளவில் பொலிஸாரால் 22 கிலோ மதிப்புடைய கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகத்திற்கிடமான பொதிகள் காணப்படுவதாக புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து புலனாய்வு பிரிவினரதும் முல்லைதீவு காவல் துறையினரதும் தேடுதல் நடவடிக்கையை தொடர்ந்து 22 கிலோ நிறையுடைய 11 கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பில் கடற்தொழிலாளர்களிடம் விசாரனை நடாத்தப்பட்டு ஆரம்ப கட்ட விசாரனைகளின் பின் அப் பொதிகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.







