வடக்கு கிழக்கு இணைவு சாத்தியமற்ற ஒன்று-பிள்ளையான்


தமிழரசு கட்சியின் முரன்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண மக்கள் தனித்துவமான நிர்வாகத்தை விரும்புகிறார்கள்.நாம் மொழியால் ஒன்றுப்பட்டு நிற்பதால் இணைந்து செயலாற்ற முடியும் எனினும் நிர்வாகம் இரண்டாக நடைபெற வேண்டும் என கூறினார்.கிழக்கு மக்களை திருப்தி படுத்த கூடிய வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாமல் வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமற்ற ஒன்று என குறிப்பிட்டார்.

மேலும் தெரிவிக்கையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அடிப்படை யாப்பு பற்றிய விடயங்கள் கூட கட்சியின் உறுப்பினர்களுக்கு தெரியாத நிலையில் ஏற்பட்ட முரண்பாடுகளானது நீதிமன்றம் வரை சென்றுள்ளதாகவும் இவ்வாறான நிலையில் தமிழரசு கட்சியுடன் இணைந்து செயல்படுவது சாத்தியமற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினுடைய வேலைத்திட்டங்களும் கொள்கைகளும் விரும்பத்தக்க வகையில் அமைந்துள்ளன.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினுடைய வேலைத்திட்டங்களும் கொள்கைகளும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு விரும்பத்தக்க வகையில் அமைந்துள்ளன.இதுவே சிலருடைய கருத்துகளிலும் கேள்விகளிலும் தொக்கி நிக்கின்ற விடயமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.