700 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு- நுகர்வோர் அதிகார சபை

இந்த வருடத்தின் மாத்திரம் இதுவரையான காலத்தில் 7,627 வர்த்தக நிலையங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

அதில் பண்டிகை காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் நுகர்வோர் சட்டத்தை மீறிய 726 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளது.

பொருட்களில் விலைப்பட்டியல் இன்றி விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அதிகாரசபையின் விசேட விசாரணை பணிப்பாளர் சஞ்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார்.