சமஷ்டித் தீர்வை நோக்கி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செயற்பட்டால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒத்துவழங்கத் தயார் என கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள கஜேந்திரகுமாரின் இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் மீண்டும் தமிழ்த் தேசியத்தை தங்கள் மனதிலே கொண்டு தங்கள் விருப்பத்தை வெளிக்காட்டியுள்ளனர்.
75 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளனர், எனத் தெரிவித்தார்.






