ஐனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியினர் தேர்தல் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்

எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தல் தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் முக்கிய தீர்மானம் மிக்க கலந்துரையாடல் ஒன்று தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் ஆரம்பமாகியுள்ளது.

இச் சந்திப்பில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் சின்னம் தொடர்பாகவும் தீர்மானம் மிக்க கலந்துரையாடல் இடம்பெறுகின்றது.