யாழ் பல்கலையில் மொழிபெயர்ப்பு தினக் கொண்டாட்டங்கள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறையின் ஏற்பாட்டில் மொழிபெயர்ப்புத் தினக் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 4ஆம் திகதி முற்பகல் 8 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணிவரை யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் குறித்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, சிறப்பு விருந்தினராக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

முற்பகல் 8 மணிக்கு கண்காட்சியும், பிற்பகல் 1.30 மணியளவில் சஞ்சிகை வெளியீடும், பிற்பகல் 4 மணியளவில் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.