வலி.வடக்கில் காணிகள் விடுவிக்கப்படும்! தேசிய மக்கள் சக்தி யாழில் உறுதி

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் உள்ள காணிகள் விடுவிப்பு சம்பந்தமாக ஏற்கனவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கவனம் செலுத்தியுள்ளார் என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை பொது அமைப்புக்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இராணுவவசமுள்ள காணிகள் விடுவிப்பு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது. அதன்போது, காணி தொடர்பாகவும், மீள்குடியேற்றம் தொடர்பாகவும் பல கோரிக்கைகளை முன்வைத்து பலர் தமது மன ஆதங்கங்களையும் வேத lனைகளையும் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரமிடம் வெளிப்படையாகத் தெரிவித்தனர்.

அதன்போது கருத்துத் தெரிவித்த சந்திரசேகர், “வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் உள்ள காணிகள்விடுவிப்பு சம்பந்தமாக ஏற்கனவே ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன் அது தொடர்பான விவரங்களையும் கோரியுள்ளார்.

எனவே, வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இராணுவத் தின் பயன்பாட்டில் உள்ள காணிகள் பெரும்பாலானவற்றை அரசு விடுவிக்கும்.” – என்றார்.