கரும்பலகைச் சின்னத்தில் சுயேட்சைக் குழு-13இல் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டமைப்பின் ஊடக சந்திப்பு நேற்றையதினம் யாழ்ப்பாணம் – அரியாலையில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்,
பல தலைவர்களின் வளர்ச்சிக்காக அடிமட்ட தொண்டனாக களத்தில் நின்று போராடி தற்போது மக்களின் குரலாக பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்ற என்னத்தோடு இத் தேர்தலில் போட்டியிடுகின்றேன்.
மக்களின் வாக்குகளால் தெரிவாகிய பிரதிநிதிகள் நாடாளுமன்றத்துக்கு சென்றதன்பிற்பாடு அவர்கள் சென்றதற்கான நோக்கத்தினை மறந்து மக்களுக்கு பொறுப்பு கூறும் கடமையிலிருந்து விலகியிருக்கின்றார்கள். அதனால் மக்கள் சீற்றத்தில் இருக்கின்றார்கள். மக்களில் ஒருவன் என்றவகையில் எனக்கும் அந்த சீற்றம் இருக்கின்றது. அதன் வெளிப்பாடாகவே நாங்கள் இன்று தேர்தலில் களமாடுகின்றோம்.
தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளிடையே தற்போது ஏற்பட்டிருக்கும் பிளவானது சிங்கள கட்சிகள் மற்றும் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான கட்சிகளின் பக்கம் மக்கள் செல்வதற்கு வழிவகுத்துள்ளது. இதன் காரணமாக தமிழ்த் தேசிய அரசியல் பலமிழந்து தமிழர்களின் தனித்துவம் மழுங்கடிக்கப்படுகிறது.
இவ்வாறான பின்னணியில் தான் இளைஞர்களாகிய நாங்கள் பொறுப்புகூறும் கடப்பாடோடு, புதிய தமிழ்த் தேசிய மறுமலர்ச்சியை அரசியல் களத்திலே உருவாக்குவதற்காக சுயேட்சையாக போட்டியிடுகின்றோம்.
எமது வேட்பாளர்கள் அரசியல் பிழைப்பிற்காக கொழும்பிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் முகாமிட்டவர்கள் அல்ல. நாம் நாம் யுத்த கால வலியை மக்களோடு மக்களாக உணர்ந்தவர்களாக மக்களுக்கான சமூக சேவை புரிந்தவர்களாக ஜனநாயக வழியில் மக்களை வழிநடத்திச் செல்லும் ஆளுமை மிக்கவர்களாக உங்கள் முன் வந்து நிற்கின்றோம்.
தமிழர்களுக்கான தீர்வினை தருவது தொடர்பிலே சிங்கள இனவாத கட்சியினர் முடிவெடுக்க முடியாது. எமக்கான தீர்வினை பொதுசன வாக்கெடுப்பு மூலம் பெறவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
எதிர்காலத்திலே உசுப்பேற்றும் அரசியலை கைவிட்டு அரசியல் தீர்வை நோக்கி பயணிக்கின்ற அதே சமநேரத்தில் நமது நாட்டின் அபிவிருத்தி மக்களின் வாழ்வாதார முன்னேற்றங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்துவோம், என்றார்.






