தமிழர்கள் ஏதாவது ஒரு தமிழ்க் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும், ஒருபோதும் ஜே.வி.பிக்கு வாக்களிக்கக் கூடாது இவ்வாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி செலஸ்ரின் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று(29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் திடிரென மழைக்கு முளைத்த காளான்கள் போல் யாழ்ப்பாணத்தில் வேறு தலைவர்கள் இல்லை என்ற நினைப்பில் தேசிய மக்கள் சக்தி செயற்படுகின்றது.
தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரனுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?
இவர் கண்டியை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர்களுக்கு ஏன் யாழ்ப்பாண மக்கள் வாக்களிக்க வேண்டும்.
ஏதாவது ஒரு தமிழ்க் கட்சிக்கு வாக்களியுங்கள் ஆனால் தமிழர்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஒருபோதும் வாக்களிக்கக்கூடாது.
அநுரகுமார திசாநாயக்க தமிழர்களுக்கான தலைவர் இல்லை. அவர் சிங்கள மக்களின் தலைவர். தமிழர்கள் தமிழ்த் தலைவர்களுக்கே வாக்களிக்கவேண்டும், என்றார்.






