செம்மணி மனித புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட சிறுகுழந்தையின் எலும்புக்கூடு

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றையதினம் கைக்குழந்தையின் என்புத் தொகுதி உட்பட 3 மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு இன்று காலை ஆரம்பமானது. இன்றைய தினத்தில் கைக்குழந்தையின் என்புத்தொகுதி உட்பட 3 மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை செம்மணி மனிதப் புதைகுழியில் 22 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

நேற்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டிருந்தமை குறிப்பிடதக்கது.