மனோகணேசன் தன்னை பாதுகாக்கவே அரசியல் கைதிகள் பற்றி பேசினார் – சுமந்திரன்

மனோகணேசன் தான் மாட்டிய அரசியல் சுழலில் இருந்து தப்புவதற்காக தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தினை கையில் எடுத்துள்ளார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று காலை அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

பொறுப்புக்கூறல், இராணுவத் தளபதியின் பயணத்தடை தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டை வரவேற்கின்றேன்.

துமிந்த சில்வாவை விடுதலை செய்யும் மனுவில் கையெழுத்து வைத்துவிட்டு அந்த மனு திடீர் என பொதுவெளியில் வந்ததும் அதற்கு எதிராக கிளம்பிய எதிர்ப்பை சமாளிப்பதற்காக தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை மனோகணேசன் கையில் எடுத்துள்ளார்.

இது தொடர்பில் என்னுடன் கதைத்த போது அரசியல் கைதிகள் விவகாரத்தையும் துமிந்த சில்வா விவகாரத்தையும் ஒன்றாக பார்க்க வேண்டாம் என தெரிவித்தேன். இதனை திரிவுபடுத்திய மனோகணேசன் இந்த நேரத்தில் அரசியல் கைதிகள் பற்றி கோட்டபாயவிடம் பேசுமுடியாதென நான் கூறியதாத ஊடகங்களில் கூறியிருந்தார்.

கூட்டமைப்பு பேச்சாளர் தெரிவு நிறைவடையவில்லை ஆகையால் விரும்பாதபோதும் தொடர்ந்தும் பேச்சாளராக பதவிவகிக்கின்றேன், என்றார்.