மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ளதால் 16,000 கோடி ரூபாய் நட்டம்!

தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ளதால் அரசாங்கத்துக்கு 16,000 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.

மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ளதால் நாளொன்றுக்கான நட்டம் 700 கோடி என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்ட 20 ஆம் திகதி முதல் எதிர்வரும் 13ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள்ளேயே 16,000 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)