யாழ்ப்பாணம், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், சுகாதார நடைமுறைகளை மீறி அதிகளவானோரோடு திருமண நிகழ்வு நடத்தியமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க சென்ற சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதார வைத்திய பரிசோதகர் மீது தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் காரைநகரில் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு பெருமெடுப்பில் திருமண சடங்கினை நடத்தினர்.
குறித்த நிகழ்வு தொடர்பான ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவாகியிருந்த நிலையில் சுகாதார பரிசோதகர்கள் நிகழ்வில் கலந்துகொண்டவர்களை தனிமைப்படுத்தியதுடன் அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம்(04) சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு பி.சி.ஆர் பரிசோதனைக்கு சென்றவர்கள் பி.சி.ஆர் உபகரணங்களை தூக்கி வீசி, சுகாதார வைத்திய அதிகாரி மீதும் சுகாதார பரிசோதகர் மீதும் தாக்குதலுக்கு முயற்சித்ததுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





