வடக்கு மாகாணத்தில் செப்ரெம்பர் மாதத்தின் முதல் 6 நாள்களில் 75 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் வவுனியா மாவட்டத்தில் 29 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 27 பேரும் கடந்த 6 நாள்களில் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2020 மார்ச் தொடக்கம் நேற்றுவரை வடக்கு மாகாணத்தில் 488 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





