தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் – அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கம்

தமது கோரிக்கைகளுக்கான உரிய தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி அல்லது நீதியமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடும் வரையில் தமது போராட்டம் தொடர்ந்தும் நடத்தப்படும் என ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளை புறக்கணித்து முன்னெடுத்துள்ள தொழிற்சங்க போராட்டம் இன்று 59 நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எவ்வாறாயினும் தமது தொழிற்சங்க போராட்டத்தினால் மரணவர்கள் எதிர்நோக்கியுள்ள அசௌகரியத்திற்கான முழு பொறுப்பினையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)