ஊரடங்கு நீடிக்கப்படுமா? – நாளை தீர்மானம்!

நாடு முழுவதும் எதிர்வரும் 13ம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து நாளை(10) தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் கொரோனா தடுப்புக்கான செயலணி நாளை கூடவுள்ளது. இந்த கூட்டத்தில் கடந்த வார அறிக்கைகளை ஆராய்ந்து, நாளைய தினம் ஊரடங்கை நீடிப்பதா? இல்லையா? என்ற தீர்மானம் எட்டப்படும் என சுகாதார தரப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)