பட்டதாரிகளுக்கான அரசாங்க வேலைவாய்பில் உள்வாங்கப்படாது நிராகரிக்கப்பட்டவர்கள் இன்றைய தினம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.
அரசாங்கத்தினால் பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட நியமனங்களில் ஊழியர் சேமலாப நிதியினை காரணம் காட்டி பட்டதாரி நியமனம் நிறுத்தப்பட்டிருந்தது. அதற்குரிய மேல்முறையீடுகள் கடந்த 15ஆம் தேதி வரை முன்னெடுக்கப்பட்டு மாவட்ட செயலகங்கள் ஊடாக பிரதேச செயலகங்களில் கையளிக்கப்பட்டது.
இந்நிலையில் இடை நிறுத்தப்பட்டு மேன்முறையீடு செய்த பட்டதாரிகளுக்கான நியமனத்தை உடனே வழங்குமாறு ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தின் ஊடாக இன்றைய தினம் இலங்கையில் அனைத்து மாவட்ட செயலகங்களிலும் மகஜர் கையளித்திருந்தனர்.
அதனடிப்படையில் இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசனிடம் மகஜர் கையளிக்கப்பட்டது .






