அனைத்து பாடசாலைகளும் நவம்பரில் திறப்பு

நாடுபூராகவுமுள்ள அனைத்து பாடசாலைகளையும் நவம்பர் மாதத்துக்கு முன்னர் திறப்பதற்கான வழிக்காட்டல் அறிக்கையை தயாரித்து, நாளைய தினம்(13) கையளிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுகாதார அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

விசேட வைத்திய நிபுணர்கள், தொழில்நுட்ப மதிப்பீட்டு நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பிரிதிநிதிகள் மற்றும் கல்வி அமைச்சின் பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் பாடசாலைகளை மீள திறப்பதற்கான ஆலோசனை அறிக்கை தயாரிக்கப்பட்டு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)