
மோட்டார் சைக்கிள் அதிர்வுகள் ஐபோன்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.
ஆப்பிளின் இணையதளத்தில் ஐபோன் பயனர்களுக்கு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது, மோட்டார் சைக்கிள்களைப் போன்ற இயந்திர அதிர்வுகள் ஐபோன் கேமரா அமைப்புகளை சேதப்படுத்தும்.
தெளிவான, கூர்மையான படங்களை எடுக்க உதவும் வழிமுறைகள் இயந்திர அதிர்வுகளால் பாதிக்கப்படலாம். எனவே தொலைபேசிகள் சக்திவாய்ந்த மோட்டார் சைக்கிள்களுடன் இணைக்கப்படக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிலர் மோட்டார் சைக்கிள்களுடன் தொலைபேசியை இணைத்து வீடியோ எடுக்க பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கே இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிர்வு தணிப்பு மவுண்ட்களை பயன்படுத்துமாறு ஆப்பிளின் இணையதளத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





