கொரோனாத் தடுப்பூசியின் மூன்றாவது அலகு தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை

இலங்கையர்களுக்கு கொரோனாத் தடுப்பூசியின் மூன்றாவது அலகு (பூஸ்டர் தடுப்பூசி) வழங்குவதற்கான இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். மேலும்,

12 முதல் 19 வயதுக்குட்பட்ட நாள்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கொரோனாத தடுப்பூசி வழங்கும் பணி நாளை(24) ஆரம்பிக்கப்படும்

நாளை முதல் கொழும்பு, அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் இந்தப் பணி முன்னெடுக்கப்படும். கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையிலும் மற்ற இரண்டு மாவட்டங்களில் உள்ள கிளினிக்குகளிலும் தடுப்பூசி வழங்கப்படும்.

தேவைப்பட்டால் மூன்றாவது அலகு தடுப்பூசிக்கு முற்பதிவு கொடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார். இரண்டாவது அலகைப் பெற்ற பிறகு மூன்றாவது அலகைப் பெற்றுக்கொள்வதற்குக ஒரு குறிப்பிட்ட காலக்கெடு உள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரிகள் இந்த விடயத்தில் உத்தரவுகளை வெளியிடுவார்கள்.

மருத்துவ வல்லுநர்களின் பரிந்துரைகளை பரிசீலித்த பின்னர் செயலணியின் கூட்டத்தில் ஜனாதிபதி இறுதி முடிவை எடுப்பார், என இராணுவத் தளபதி தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)