தேர்தல்கள் பிற்போடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது- எம்.ஏ சுமந்திரன்

நாட்டில் நடைபெறவேண்டிய தேர்தல்கள் பிற்போடப்படுவதானது ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகார காலம் அடுத்த வருடம் நிறைவடையவுள்ள நிலையில் தேர்தல்களை நடத்தாது பிற்போடுவதற்கு அரசாங்கம் முனைந்துள்ளது, தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும்.

அத்துடன், பல வருடங்களாக நடத்தப்படாதுள்ள மாகாண சபைத் தேர்தல் அதற்கு முன்னதாக நடத்தப்பட வேண்டும்.

அரசாங்கத்தினால் தேர்தல்கள் பிற்போடப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)