இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரி அடுத்த வருடம் நீக்கப்படும் – கூட்டமைப்பு எதிர்வுகூறல்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் ஜிஎஸ்பி பிளஸ் வரி அடுத்த வருடம் நீக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வுகூறியுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு பதிலாக இலங்கை அரசாங்கம் தொடர்ந்து அதனை பயன்படுத்தி வருவதால் இந் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமனற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை தொடர்ந்து வழங்குவது தொடர்பில் ஆராயும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக் குழு இன்று மாலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து கலந்துரையாடியது.

இதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே எம்.ஏ சுமந்திரன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)