கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆனையிறவுப் பகுதியில் நேற்று(28) இரவு 9.00 மணியளவில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
திருத்த வேலைக்காக ஏ9 வீதி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன், பளையில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மோதுண்டதிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த சிறுவன் ஒருவருக்கு காலில் காயமேற்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)






