யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் தாயாருக்கு கொரோனோத் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவரது ஒரு மாத குழந்தை திடீரென உயிரிழந்துள்ளது.
குறித்த தாய்க்கு கடந்த 22ஆம் திகதி கொரோனோ தொற்று உறுதியான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் வீட்டிலிருந்த அவரது குழந்தை உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம்(29) வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டது.
குழந்தையின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குழந்தைக்கு தொற்று கண்டறியப்படவில்லை. இந்நிலையில் பிரேத பரிசோதனையை சட்ட வைத்திய அதிகாரி இன்றைய தினம்(30) மேற்கொள்ளவுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





