தேசப்பற்றளார் ஏரம்பு இரத்தினவேலின் (தம்பி ஐயா) முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இருவேறு இடங்களில் இடம்பெற்றன.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏற்பாட்டில் தவட.தே.ம.முன்னணியின் வடூக்கோட்டை காரியாலயத்திலும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் தேசிய அமைப்பாளர் மணிவண்ணன் தலைமையில் கொக்குவிலிலும் அனுஷ்டிக்கப்பட்டது.
வட்டுக் கோட்டையில் நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், த.தே.ம.முன்னணியின் சட்ட ஆலோசகர்களான கனகரட்னம் சுகாஷ், நடராஜா காண்டிபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அது போல் கொக்குவிலில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணன், விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் வீரா, யாழ் மாநகர சபை உறுப்பினர் தனுஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






